/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணையில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை
/
கொடிவேரி தடுப்பணையில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை
ADDED : ஜூன் 04, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில், தினமும் காலை, 8:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் பாலிதீன் கவர், திண்பண்ட கவர், பிளாஸ்டிக் டீ கப்புகளை பயன்படுத்தி விட்டு, பூங்கா மற்றும் பவானி ஆற்றங்கரையோரம் தில் வீசி செல்கின்றனர்.
இதனால் தடுப்பணை வளாகம் முதல், நீர்நிலை பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இந்நிலையில் கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தடுப்பணை முன்புறம் அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.