/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் விரிவாக்க பணி துவக்கம்
/
ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் விரிவாக்க பணி துவக்கம்
ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் விரிவாக்க பணி துவக்கம்
ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் விரிவாக்க பணி துவக்கம்
ADDED : நவ 16, 2025 01:36 AM
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நான்கு பிளாட்பார்ம் உள்ளது. இதில் ரயில் நிற்கும் பகுதிக்கும், பிளாட்பார்முக்கும் இடையே சிறு இடைவெளி இருந்தது. இதனால் சிலர் ரயிலில் ரயிலில் ஏறும் போதும், இறங்கும் போதும் கால் தவறி விழுவது தொடர்கிறது.
பிளாட்பார்ம், ரயில் பெட்டி இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில், தென்னக ரயில்வே சார்பில் பிளாட்பார்ம்களை அகலப்படுத்தும் பணி துவங்கப்படும் என அதிகாரிகள் கூறியிருந்தனர். இதன்படி ஈரோடு ஸ்டேஷனில் பிளாட்பார்ம் அகலப்படுத்தும் பணி துவங்கி நடக்கிறது. தற்போது மூன்றாவது பிளாட்பார்மை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அடுத்தடுத்து 1, 2, 4வது பிளாட்பார்ம்களும் அகலப்படுத்தப்படும். பயணிகளும் ரயிலில் ஏறும்போதும், இறங்கும்போதும் தவறி விழும் சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்று, ரயில்வே அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
புறக்காவல் நிலையமாக மாறியபயணிகள் காத்திருப்பு அறை
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், 3 மற்றும் 4வது பிளாட்பார்ம் இடையில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டது. ஸ்டேஷனில் கீழ் நடைமேம்பாலம் அமைக்கும் பணிக்காக, சில மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. ரயில்வே காலனியில் ரயில்வே ஊழியர் குடியிருப்புக்கு ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் புகார்களை தெரிவிக்க முடியாத நிலை இருப்பதாக பயணிகள் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் 3 மற்றும் 4வது பிளாட்பார்ம் இடைப்பட்ட பகுதியில் இருந்த பயணிகள் காத்திருப்பு அறை, ரயில்வே புறக்காவல் நிலையமாக செயல்பட நிர்வாகம் அனுமதித்தது. இதையடுத்து புறக்காவல் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதேசமயம் 1 மற்றும் 2வது பிளார்ட்பார்ம் இடைப்பட்ட பகுதியில், ரயில்வே பாதுகாப்பு படை புறக்காவல் நிலையம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

