/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விழிப்புணர்வு பேரணியில் இன்ப அதிர்ச்சி
/
விழிப்புணர்வு பேரணியில் இன்ப அதிர்ச்சி
ADDED : செப் 24, 2025 01:09 AM
தாராபுரம் :தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு, காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி சக்திவேல், மாவட்ட உரிமையியல் நீதிபதி பாண்டி மகாராஜா, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலையில், மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன் துவக்கி வைத்தார்.
சர்ச் ரோடு, பெரிய கடை வீதி, பூக்கடை கார்னர், வசந்தா ரோடு வழியாக சென்று, அமராவதி சிலை அருகே நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி, 200க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் பேரணியில் பங்கேற்றனர்.
10 பேருக்கு இலவச ஹெல்மெட்பேரணி முடிந்த பின் அவ்வழியே, ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை, வட்டார போக்குவரத்து மற்றும் போக்குவரத்து போலீசார் வழிமறித்தனர். ஹெல்மெட் அணியாதததால் ஏற்படும் விபரீதம் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இனி அவ்வாறு செல்லக்கூடாது எனக்கூறி, 10 வாகன ஓட்டிகளுக்கு, ஐ.எஸ்.ஐ. தரச் சான்றுடன் கூடிய ஹெல்மெட்டுகளை வழங்கி, இன்ப அதிர்ச்சி தந்தனர்.