பிரதமரின் சோலார் மின்சார திட்டம் இதுவரை 5,695 விண்ணப்பம் பதிவு
பிரதமரின் சோலார் மின்சார திட்டம் இதுவரை 5,695 விண்ணப்பம் பதிவு
ADDED : அக் 23, 2026 06:38 AM
ஈரோடு:கடந்த,
2024 பிப்.,ல் அறிவிக்கப்பட்ட, பிரதமரின் மேற்கூரை சோலார் இலவச
திட்டம், 2027 மார்ச், 31 வரை நடைமுறையில் இருக்கும். இத்திட்டத்தில்,
ஒரு கிலோ வாட் - 30,000 ரூபாய், 2 கிலோ வாட் - 60,000 ரூபாய், 3 முதல்,
10 கிலோ வாட் வரை 78,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
இதுபற்றி
மின்வாரியத்தினர் கூறியதாவது:
சோலார் தகடு, 27 ஆண்டுகள் வரை
செயல்படக்கூடியது. இத்திட்டத்துக்கு, www.pmsuryaghar.gov.in என்ற
இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். அனைத்து வீட்டு மின்
உரிமையாளர்களும் கூடுதல் ஆவணமின்றி மின் கட்டண ரசீதை மட்டும்
பதிவேற்றம் செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம்
மட்டுமே விண்ணப்பம் பதிவு செய்ய இயலும். ஈரோடு மற்றும் கோபி மின்
வட்டத்துக்கு, 15,193 மின் நுகர்வோர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில் இதுவரை ஈரோடு வட்டத்தில் கடந்த, 5 வரை, 4,320 பேர், கோபி மின்
வட்டத்தில், 1,375 பேர் என, 5,695 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில்,
4,600 விண்ணப்பங்களுக்கான பணி முடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.
