நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: பா.ம.க., ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோபியில் நேற்று நடந்தது.
மாவட்ட செய-லாளர் ஞானவேல் தலைமை வகித்தார். கோவில் காவலாளி அஜீத்குமார் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆக.,10ல் நடக்கும் மகளிர் மாநாட்டுக்கு, அதிகளவில் மகளிரை அழைத்து செல்ல வேண்டும். பவானி ஆற்று நீர் மாசுபடுவதையும், ஆகா-யத்தாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தி, சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றினர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ரவிசேகர், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். கோபி ஒன்றிய செயலாளர் லிங்கேஸ்-வரன் வரவேற்றார். நகர செயலாளர் கதிர்வேல் நன்றி கூறினார்.