/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராமதாஸ் தலைமையில் செயல்பாடு ஒருங்கிணைந்த பா.ம.க., தீர்மானம்
/
ராமதாஸ் தலைமையில் செயல்பாடு ஒருங்கிணைந்த பா.ம.க., தீர்மானம்
ராமதாஸ் தலைமையில் செயல்பாடு ஒருங்கிணைந்த பா.ம.க., தீர்மானம்
ராமதாஸ் தலைமையில் செயல்பாடு ஒருங்கிணைந்த பா.ம.க., தீர்மானம்
ADDED : ஜூலை 15, 2025 01:07 AM
பவானி, பா.ம.க., கட்சி மற்றும் வன்னியர் சங்க, ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம், பவானி அருகே நேற்று நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஆண்டவன் தலைமை வகித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர், ஆறுமுகம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ம.க. வன்னியர் சங்கத்தை நிறுவி தலைமையேற்று நடத்தும் மருத்துவர் ராமதாஸ் தலைமையில், ஒட்டுமொத்த நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமுதாய மக்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.