/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
16 வயது சிறுமி கர்ப்பம் தம்பதி மீது போக்சோ
/
16 வயது சிறுமி கர்ப்பம் தம்பதி மீது போக்சோ
ADDED : ஜூலை 22, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, திருச்சி மாவட்டம் முசிறி, அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற செல்வகுமார், 29; இவரின் மனைவி ஜோதி. இருவரும் சென்னிமலை அருகே முகாசிபிடாரியூரில் வசிக்கின்றனர். உறவினரின், 16 வயது மகள் சரவணன் வீட்டில் தங்கியிருந்தார். சிறுமியிடம் சரவணன் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார்.
இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். சிறுமியின் தாய் புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரித்தனர். இதையடுத்து சரவணன், மனைவி ஜோதி மீது, போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்கின்றனர்.