ADDED : அக் 14, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சத்தியில்
வெற்றி நர்சிங் ஹோமில் ஊழியராக பணிபுரிபவர் ஸ்ரீதர், 40; இங்கு
நர்சிங் பயிற்சி படிப்புக்கு, 17 வயது இளம்பெண் சேர்ந்துள்ளார்.
பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டு சொந்த ஊரான அவிநாசிக்கு சென்று
விட்டார். ஸ்ரீதர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவிநாசி
அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரித்த போலீசார்
போக்சோவில் வழக்குப்பதிந்தனர். பிரச்னை நடந்ததாக கூறப்படும் இடம்
சத்தியமங்கலம் என்பதால், சத்தி அனைத்து மகளிர் போலீசுக்கு, வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.
