'பார்' மேற்பார்வையாளருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது
'பார்' மேற்பார்வையாளருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது
ADDED : அக் 14, 2026 05:50 AM
ஈரோடு:திருச்சி
பாலக்கரை காஜாபேட்டை புது வீதியை சேர்ந்தவர் கவின் ஸ்மித், 26; ஈரோடு
அருகே திண்டலில் உள்ள பண்ணையார் ரெஸ்டாரண்ட் மேற்பார்வையாளர்.
கடந்த, 11ம் தேதி நள்ளிரவில் ஐந்து பேர் பாரில் மது குடித்த நிலையில்,
வாந்தி எடுத்து சத்தமிட்டனர்.
பார் மூடும் நேரமாகி விட்டதால்
கிளம்புங்கள் என்று ஐந்து பேரிடமும், கவின் ஸ்மித் கூறியுள்ளார்.தகாத
வார்த்தை பேசியபடி சென்றவர்கள் மறுநாள் மதியம் ரெஸ்டாரண்டுக்கு
வந்தனர். அதில் ஒருவர் எங்களை எவ்வாறு போக சொல்லலாம் என்று கேட்டு
கத்தியால் குத்தினர். இதை தடுத்த சக ஊழியர் வெங்கடாசலபதிக்கும், 27,
தாக்குதலுக்கு ஆளானார்.இதைப்பார்த்த பிற ஊழியர்கள் தடுத்த
நிலையில், கொலை மிரட்டல் விடுத்தபடி ஐந்து பேரும் ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்த புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்
பதிந்தனர்.
ஈரோடு டீசல்ஷெட் ஈ.எம்.எம்.வீதி கவுதம், 21; ஈரோடு மரப்பாலம்
ஜீவானந்தம் வீதி விக்னேஸ், 23, பூபதி, 22; ஈரோடு பெருமாள்காடு ஹர்ஷித்,
22, என நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவான சரண் என்பவரை தேடி
வருகின்றனர்.
