/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலியல் தொல்லை புகார் வாலிபர் மீது போக்சோ
/
பாலியல் தொல்லை புகார் வாலிபர் மீது போக்சோ
ADDED : ஜூலை 05, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம், கொத்துக்காரர் வீதியை சேர்ந்தவர் தமிழ் செல்வன், 30, தொழிலாளி. ஈரோடு பகுதியை சேர்ந்த, 13 வயதான, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பெற்றோரிடம் சிறுமி தெரிவிக்கவே, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸில் புகார் தந்தனர். விசாரணைக்கு பின் தமிழ்செல்வன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான தமிழ்செல்வனை தேடி வருகின்றனர்.