ADDED : ஆக 19, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
பாசூர்:பாசூர்,
சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பழனியம்மாள், 63; கணவன் இறந்த நிலையில்
தனியாக வசித்தார். மகள் உமாதேவி, பழனியம்மாளுக்கு செலவுக்கு பணம்
கொடுத்து வந்தார்.
பழனியம்மாளுக்கு சர்க்கரை, ரத்த அழுத்த நோயால் மன
உளைச்சல் ஏற்பட்டது. கடந்த, 16ல் சல்பாஸ் மாத்திரையை தண்ணீரில்
கரைத்து குடித்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற
நிலையில் மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
