/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீசார் வாக்குவாதம்; நடுரோட்டில் பரபரப்பு
/
போலீசார் வாக்குவாதம்; நடுரோட்டில் பரபரப்பு
ADDED : ஜூன் 04, 2025 01:06 AM
திருப்பூர், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், பா.ஜ., வினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார், ரோட்டிலேயே தடுத்து நிறுத்தியதால், வாக்குவாதம் ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம் நடந்ததால், பல்லடம் ரோட்டில், கலெக்டர் அலுவலகம் முன், போக்குவரத்து போலீசார், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், வாக் கிடாக்கியில் எஸ்.ஐ., முத்துசெல்வனை அழைத்து, எங்கு இருக்கிறீர்கள் என கேட்டார்.மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருப்பதாகவும், கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும், எஸ்.ஐ., பதிலளித்தார். சிறிதுநேரத்தில், எஸ்.ஐ., சேர்ந்தபோது, இன்ஸ்பெக்டருடன் நடு ரோட்டில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தான் அழைத்த நேரத்தில் உடனடியாக வராதது குறித்து கடும் கோபத்தோடு, எஸ்.ஐ.,யிடம் கேள்வி கேட்டார். எஸ்.ஐ., பதில் அளித்தபோதும், செவிமடுக்காத இன்ஸ்பெக்டர், தொடர்ந்து பேசினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.