/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் அருகே 30 மணி நேரம் சாலை மறியல் விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்
/
காங்கேயம் அருகே 30 மணி நேரம் சாலை மறியல் விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்
காங்கேயம் அருகே 30 மணி நேரம் சாலை மறியல் விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்
காங்கேயம் அருகே 30 மணி நேரம் சாலை மறியல் விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்
ADDED : பிப் 15, 2025 05:51 AM
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா பகுதியில், ஓராண்டாக கால்நடைகளை வெறிநாய்கள் கடித்து வருகின்றன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கால்நடைக-ளுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகம், காங்கேயம் தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காங்கேயம் அருகே சென்னிமலை சாலை திட்டு-பாறை அருகே பாரவலசில், ௨௨ செம்மறி ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், இறந்த ஆடுகள் உடலுடன், நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு பாரவலசில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்-டனர்.
தாராபுரம் ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா, காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன், காங்கேயம் தாசில்தார் மேகனன் பேச்சு வார்ததை நடத்-தியும் முடிவு கிடைக்காமல், விவசாயிகள் விடிய விடிய சாலை மறியலை தொடர்ந்தனர். இதனால் திருப்பூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், எஸ்.பி., யாதவ் கிரீஸ் அசோக் ஆகியோர், விவசாயிகளிடம் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். வெறிநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்-பீடு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நட-வடிக்கை எடுக்க வேண்டும் என அறிவித்தால் மட்டுமே போராட்-டத்தை கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். உடன்பாடு ஏற்படாத நிலையில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியும் செவி சாய்க்க-வில்லை. இதையடுத்து மாலை, 5.00 மணியளவில் போலீசார் லேசான தடியடி நடத்தியும், விசாயிகளை குண்டுக்கட்டாக துாக்கி சென்றும் கைது செய்தனர். பரஞ்சேர்வழி கரியகாளிய அம்மன் கோவில் மண்டபத்தில் இவர்களை அடைத்தனர். விவசாயிகளின் தொடர் சாலை மறியலால், காங்கேயம்-சென்னிமலை சாலையில், 30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பா.ஜ., ஆதரவு
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மோகனப்பிரியா உள்-ளிட்ட நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்-தனர்.