ADDED : மே 25, 2026 02:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:போலீசார்
ஆண்டுக்கு, 15 நாட்கள் விடுப்பு எடுக்காமல் (இ.எல்.,) விடுப்பை சரண்டர்
செய்தால், 15 நாட்களுக்கு உரிய சம்பள தொகை கூடுதலாக
வழங்கப்படுவது வழக்கம்.
இந்த வகையில், 2025ல் நுாற்றுக்கணக்கான
போலீசார், விடுப்பை சரண்டர் செய்தனர். இதற்கான விண்ணப்பத்தையும்
பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர். பல மாதங்களாகியும் தொகை
வழங்கப்படவில்லை. ஒரு சில போலீசாருக்கு மட்டுமே கிடைத்துள்ளதாக,
ஈரோடு மாவட்ட போலீசார் தெரிவிக்கின்றனர். பள்ளி, கல்லுாரி
திறக்கவுள்ள சூழலில் இ.எல்., தொகையை விடுவித்தால்,
நுாற்றுக்கணக்கான போலீசார் பயன் பெறுவர் என்றும் தெரிவித்தனர்.
