ADDED : மே 07, 2025 01:29 AM
அந்தியூர்:அந்தியூர் அருகே வட்டக்காடு தோனிமடுவு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 39, விவசாயி. இவர், பத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், அப்பகுதிக்கு காவி வேட்டி அணிந்து வந்த நான்கு பேர், இரண்டு பைக்குகளில் குறி சொல்ல வந்தனர்.
அப்போது, சரவணன் வீட்டுக்கு முன் கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பெரிய ரக சேவல்களை திருடி சென்றனர். அப்போது, அதே பகுதியில் உள்ள குணசேகரன் என்பவர், அவர்களை பார்த்து சத்தமிட்டுள்ளார். சத்தத்தை கேட்டவுடன், அதிவேகமாக பைக்கை இயக்கி தப்பி சென்றனர்.
இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசில் சரவணன் கொடுத்த புகார்படி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல், நேற்று முன்தினம், ராமகவுண்டன்கொட்டாய் என்ற இடத்தில், இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் ஆட்டை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
