/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சதுர்த்தி விழா போலீஸ் கொடி அணிவகுப்பு

ADDED : ஆக 24, 2025 12:53 AM
ஈரோடு,விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்தும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் போலீசாரின் கொடிஅணிவகுப்பு நடந்தது. ஈரோட்டில் நடந்த கொடி அணிவகுப்பை எஸ்.பி., சுஜாதா துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி. தங்கவேல் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர். சம்பத் நகர் நால்ரோட்டில் துவங்கிய அணிவகுப்பு ஜி.ஹெச் ரவுண்டானாவில் முடிந்தது. இதில் போலீசார், ஊர்காவல் படையினர், அதி விரைவு படையினர் என, 108 பேர் பங்கேற்றனர்.
* பெருந்துறையில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் நடந்த ஊர்வலத்தில் பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, வெள்ளோடு, அரச்சலுார், கொடுமுடி, சிவகிரி, மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
----* அந்தியூரில் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய அணிவகுப்பை, பவானி டி.எஸ்.பி., ரத்னகுமார் தொடங்கி வைத்தார். அண்ணா சாலை, சிங்காரவீதி, பர்கூர் ரோடு வழியாக சென்று, பத்ரகாளியம்மன் கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கஸ்துாரி மற்றும் அந்தியூர், வெள்ளித்திருப்பூர், பர்கூர், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.