/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவல்துறை அமைச்சு பணியாளர்கள்இரண்டாம் நாளாக பணி புறக்கணிப்பு
/
காவல்துறை அமைச்சு பணியாளர்கள்இரண்டாம் நாளாக பணி புறக்கணிப்பு
காவல்துறை அமைச்சு பணியாளர்கள்இரண்டாம் நாளாக பணி புறக்கணிப்பு
காவல்துறை அமைச்சு பணியாளர்கள்இரண்டாம் நாளாக பணி புறக்கணிப்பு
ADDED : டிச 19, 2024 01:13 AM
ஈரோடு, டிச. 19-
ஈரோட்டில், ஏழு பேர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரி, இரண்டாம் நாளாக காவல்துறை அமைச்சு பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் பணியாற்றிய நிர்வாக அதிகாரி ரகு மீது, காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தினர், பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை மனுவாக எஸ்.பி.,யிடம் சில மாதத்துக்கு முன் அளித்தனர். அதன் மீதான விசாரணை நடந்தது. ரகு சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புகார் தெரிவித்த சங்கத்தை சேர்ந்த ஏழு பணியாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், பணியாளர்களின் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய கோரி, நேற்று முன்தினம் அமைச்சு பணியாளர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து இருந்தனர். கோரிக்கை நிறைவேறாத நிலையில், நேற்று இரண்டாம் நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். பணியாளர்கள் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாகா கமிட்டி அமைத்து, பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். பெண் ஊழியர்களை, இரவில் பணி செய்ய உத்தரவிடும் முறையை கைவிட வேண்டும் என, சங்க மாநில பொருளாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
ஈரோடு எஸ்.பி., அலுவலக த்தில், 59 அமைச்சு பணியாளர்கள் இருக்க வேண்டிய சூழலில், 50 பேர் மட்டுமே உள்ளனர். ஒன்பது பணியிடங்கள் காலியாக உள்ளது. நேற்று முன்தினம், 29 பேரும், நேற்று, 25 பேரும் பணிக்கு வரவில்லை. இத்தகவல் அரசுக்கும், போலீஸ் தலைமைக்கும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.