/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீதிமன்றத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
/
நீதிமன்றத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
ADDED : டிச 24, 2024 02:15 AM
ஈரோடு, டிச. 24-
நெல்லை நீதிமன்றம் எதிரே சில நாட்களுக்கு முன் பட்டப்பகலில், வாலிபர் ஒருவரை, பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று டி.ஜி.பி., சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் போலீஸ் பாதுகாப்பு நேற்று போடப்பட்டது. சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நடமாட்டத்துக்கு ஏற்பட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து நீதிமன்ற வளாகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சந்தேகத்துக்கு இடமாக யாராவது வந்தால் உடனடியாக விசாரிக்கப்படும். நீதிமன்றத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் உள்ளே இருக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறினர்.