/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கூகுள் நிறுவனத்தை நாடும் போலீஸ்
/
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கூகுள் நிறுவனத்தை நாடும் போலீஸ்
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கூகுள் நிறுவனத்தை நாடும் போலீஸ்
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கூகுள் நிறுவனத்தை நாடும் போலீஸ்
ADDED : அக் 07, 2024 03:24 AM
ஈரோடு: ஈரோடு வள்ளிபுரத்தான் பாளையத்தில் சி.எஸ். அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு கடந்த, ௪ம் தேதி இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்பள்ளிக்கு மட்டுமின்றி வீரப்பம்பாளையம் நாராயணா இ-டெக்னோ ஸ்கூல், மாணிக்கம்பாளையம் ரோடு பப்ளிக் ஸ்கூல், நாராயணவலசு நந்தா பப்ளிக் ஸ்கூலுக்கும் மிரட்டல் விடுத்திருந்தனர். நான்கு பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இ-மெயில் அனுப்பிய ஆசாமி, பெயர் தெரியாத வகையில் டெக்னிக்கலாக அனுப்பியுள்ளார். இதுபற்றி போலீசார் கூறியதாவது: சில தினங்களுக்கு முன் ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் அனுப்பியவர் முகவரி இருந்ததால், மிரட்டல் விடுத்தவரை எளிதில் கண்டுபிடித்தோம்.
தற்போது நான்கு பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலில், வெளிநாட்டில் இருந்து மெயில் வருவது தெரியவந்துள்ளது. உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அவர்களின் வழிகாட்டுதல்படி கூகுள்
நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ஆசாமியின் விபரம் பெறப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.