ADDED : நவ 10, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:சித்தோடு அருகே சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கோணவாய்க்கால் பகுதியில், ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பியின் ஒன்றரை வயது பெண் குழந்தை, கடந்த மாதம், 15ம் தேதி நள்ளிரவு கடத்தப்பட்டது.
குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படை அமைத்தும் இதுவரை விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தை கடத்தப்பட்டு, 25 நாட்களாகியும் சிறு தடயம் கூட கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

