/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கண்டக்டரை ஒருமையில் திட்டிய மாணவனுக்கு போலீசார் எச்சரிக்கை
/
கண்டக்டரை ஒருமையில் திட்டிய மாணவனுக்கு போலீசார் எச்சரிக்கை
கண்டக்டரை ஒருமையில் திட்டிய மாணவனுக்கு போலீசார் எச்சரிக்கை
கண்டக்டரை ஒருமையில் திட்டிய மாணவனுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : செப் 18, 2025 01:40 AM
அந்தியூர் :அந்தியூரில், அரசு பஸ் கண்டக்டரை ஒருமையில் திட்டிய பள்ளி மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியிலிருந்து, அந்தியூர் வழியாக வரட்டுப்பள்ளம் வரை கே-5 எண் கொண்ட அரசு பஸ் நாள்தோறும், நான்கு முறை சென்று வருகிறது. நேற்று டிரைவர் மாதேஸ்வரனும், கண்டக்டர் தர்மலிங்கமும் பணியில் இருந்தனர். மாலை, 4:30 மணிக்கு வரட்டுப்பள்ளத்திலிருந்து பயணிகளுடன் வந்த பஸ்சில், அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி, மாணவ, மாணவியரை ஏற்றினர்.
அப்போது, படியில் நின்று கொண்டிருந்த மாணவர்களை, உள்ளே செல்லுமாறு கண்டக்டர் தர்மலிங்கம் அறிவுறுத்தினார். அதில் சில மாணவர்கள் உள்ளே செல்ல மறுத்து, கண்டக்டரை ஒருமையில் திட்டியுள்ளனர். இதனால், படிக்கட்டை 'லாக்' செய்த டிரைவர் மாதேஸ்வரன், நேரடியாக அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பஸ்சை ஓட்டி சென்று நிறுத்தினார்.
அங்கு வந்த எஸ்.எஸ்.ஐ., செபாஸ்டியானிடம் நடந்ததை கூறி, தகாத வார்த்தையால் ஒருமையால் திட்டிய மாணவனை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.பெற்றோரை அழைத்த போலீசார், அவர்களுக்கு அறிவுரை கூறி, இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என, மாணவனை எச்சரித்து அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.