/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியில் 101 இடங்களில் இன்று போலியோ சொட்டு முகாம்
/
மாநகராட்சியில் 101 இடங்களில் இன்று போலியோ சொட்டு முகாம்
மாநகராட்சியில் 101 இடங்களில் இன்று போலியோ சொட்டு முகாம்
மாநகராட்சியில் 101 இடங்களில் இன்று போலியோ சொட்டு முகாம்
ADDED : மார் 03, 2024 01:45 AM
ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில் இன்று, 101 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
ஈரோடு மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கூறியதாவது:
போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்க, போலியோ சொட்டு மருந்து தின முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (3ல்) போலியோ சொட்டு மருந்து தின முகாம் மாவட்டம் முழுவதும், 1,412 இடங்களில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட, 1.76 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 101 இடங்களில், 30 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தி வழங்கப்படுகிறது. மேலும், மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையம், துணை சுகாதார நல வாழ்வு மையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்து, போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு கூறினார்.

