ADDED : செப் 11, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானியில் பிரசித்தி பெற்ற பண்டார அப்பச்சி, பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பொங்கல் வைபவம் நேற்று நடந்தது.
முன்னதாக காலையில் காடையாம்பட்டி மடப்பள்ளியில் இருந்து பண்டார அப்பச்சி, பகவதி அம்மன் சுவாமி புறப்பாடு நடந்தது. பின் கன்னிமார் பூஜை செய்து, முதலைக்கு சாதம் வைத்தலும், கோவில் வளாகத்தில் பொங்கல் வைபவமும் நடந்தது. பவானி, காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள், ஆடு, கோழி பலியிட்டும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். இரவில் பண்டார அப்பச்சி மற்றும் பகவதி அம்மன் சுவாமி, மீண்டும் மடப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. மறு பூஜையுடன் பண்டிகை நாளை நிறைவடைகிறது.