ADDED : மே 30, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அடுத்த கீழ்வாணி இந்திரா நகர் முத்து மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு விழா கடந்த, 20ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நேற்று நடந்தது.
முன்னதாக கீழ்வாணி பவானி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து பொங்கல் வைபவம், மாலையில் மாவிளக்கு ஊர்வலம், பெரும்பூஜை நடந்தது. கீழ்வாணி, அத்தாணி, மூங்கில்பட்டி, மேவாணி மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.