ADDED : மே 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர் : அத்தாணியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், வளையமாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நடப்பாண்டு சித்திரை மாத பொங்கல் விழா கடந்த மாதம், 17ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் அத்தாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.