நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிலில் பொங்கல் விழா
சென்னிமலை, நவ. 8-
சென்னிமலை டவுனில் காங்கேயம் பிரதான சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை பொங்கல் விழா நடந்தது. கோவில் வளாகத்தில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

