/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காமாட்சியம்மன் கோவிலில் 15ல் பொங்கல் விழா
/
காமாட்சியம்மன் கோவிலில் 15ல் பொங்கல் விழா
ADDED : மே 10, 2025 01:19 AM
சென்னிமலை, சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழா வரும், 1௫ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை பால்குட ஊர்வலம், சென்னிமலை நான்கு ராஜவீதிகளில் மேளதாளத்துடன் வந்து, கோவிலை அடைகிறது. வரும், 13ம் தேதி மாலை கும்பம்பாலித்தல், 14ம் தேதி மாவிளக்குடன் திருவீதிகளில் அம்மன் பவனி நடக்கிறது.
15ம் தேதி காலை, 6:௦௦ மணிக்கு பொங்கல் வைபவம் நடக்கிறது. அன்று மதியம், ௩:௦௦ மணிக்கு மேலப்பாளையம், மாதேஸ்வர நகரிலிருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடையும். இதை தொடர்ந்து களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடையும். 16-ம் தேதி இரவு மஞ்சள் நீர், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.