/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.1.34 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூஜை
/
ரூ.1.34 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூஜை
ADDED : டிச 01, 2024 01:20 AM
ரூ.1.34 கோடி மதிப்பிலான
திட்டப்பணிகளுக்கு பூஜை
டி.என்.பாளையம், டிச. 1--
அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை ஊராட்சி வரப்பள்ளத்தில், 6.73 லட்சம் ரூபாய் மதிப்பில் குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணி; பட்டத்தரசி அம்மன் கோவில் அருகில், 1.10 லட்சம் ரூபாய் மதிப்பில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யும் பணி; சஞ்சீவிராயன் கோவில் அருகில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வினியோகம்; சைபன் புதுாரில் இரு இடங்களில், 62 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி; சின்ன காளியூர் பகுதியில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி என பல்வேறு பணிகளை, எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பூஜை செய்து தொடங்கி வைத்தார். கணக்கம்பாளையத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவபாலன், ஈரோடு மாவட்ட சேர்மன் நவமணி கந்தசாமி, பஞ்., தலைவர்கள் பிரகாஷ், வெங்கடேஸ்வரன், சேகர், கவுன்சிலர் கஸ்துாரி திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.