ADDED : மே 07, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்:டி.என். பாளையம் யூனியனுக்குட்பட்ட, புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி ஜே.கே.கே. நகர் மற்றும் அண்ணா நகர், எருமை குட்டை ஆகிய பகுதிகளில், 32.30 லட்சம் மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கான்கிரீட் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள், புளியம்பட்டி ஊராட்சி பகுதியில், 8.5 லட்சம் மதிப்பில் நிழற்கூடம் அமைக்கும் பணி உள்ளிட்டவைகளை அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் டி.என் பாளையம் பி.டி.ஓ.,க்கள் இந்திரா தேவி, பூபதி மற்றும் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.