/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேதபாறை ஓடை குறுக்கே தடுப்பணை கட்ட பூஜை
/
வேதபாறை ஓடை குறுக்கே தடுப்பணை கட்ட பூஜை
ADDED : டிச 14, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: அந்தியூர் சட்டசபை தொகுதி டி.என்.பாளையம் யூனியன் கணக்-கம்பாளையம் ஊராட்சியில், வேதபாறை ஓடையின் குறுக்கே, 6.96 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி நேற்று தொடங்கியது. எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த தடுப்பணை, 80 மீட்டர் நீளம், 2 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இதனால், 60 கிணறுகள் மற்றும் 16 ஆழ்-துளை கிணறுகள் பயன்பெறும். 3 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். 1,307 ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

