ADDED : ஜூலை 12, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமை வகித்து, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
குடும்ப நல விளக்க கையேடு, விழிப்புணர்வு கைப்பிரதிகளை டி.ஆர்.ஓ., வெளியிட்டார். மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடந்த பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்று வழங்கி பாராட்டினார். பின்னர் உலக மக்கள் தொகை தினம்-2026 விழிப்புணர்வு ரதம், நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி காலிங்கராயன் பயணியர் இல்லம் வரை பேரணி சென்றது.
