180 பணியிடங்களை வழங்கக் கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
180 பணியிடங்களை வழங்கக் கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2026 06:10 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன், அஞ்சல்
ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு, அகில இந்திய ஜி.டீ.எஸ்., யூனியன்
சார்பில், கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அஞ்சல்-3
கோட்ட செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். அஞ்சல்-4 கோட்ட செயலர்
செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பறிக்கப்பட்ட, 180 அஞ்சல்
பணியிடங்களை திரும்ப வழங்க வேண்டும். தமிழகத்துக்கு, 1,300 கூடுதல்
பணியிடங்களை உடன் உருவாக்க வேண்டும். பணிச்சுமைக்கு ஏற்ப ஊழியர்களை
நியமிக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பதவி
உயர்வு உரிமையை பறிக்கக்கூடாது என, வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் செய்தனர்.
