/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நஞ்சனாபுரம் கொங்கு கல்லுாரியில் முதுகலை பட்ட வகுப்பு துவக்கம்
/
நஞ்சனாபுரம் கொங்கு கல்லுாரியில் முதுகலை பட்ட வகுப்பு துவக்கம்
நஞ்சனாபுரம் கொங்கு கல்லுாரியில் முதுகலை பட்ட வகுப்பு துவக்கம்
நஞ்சனாபுரம் கொங்கு கல்லுாரியில் முதுகலை பட்ட வகுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 19, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில், நடப்பாண்டு முதுகலை பட்டப்படிப்பு வகுப்பு துவக்க விழா நடந்தது. விழாவுக்கு கல்லுாரி தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க செயலாளர் கலைக்கோவன் கலந்து கொண்டார்.
முதுகலை மாணவ, மாணவிகளுக்கு, வாய்ப்புகள் பற்றியும் அதை அடைய எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கி கூறினார். நிகழ்வில் கல்லுாரி முதல்வர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் செய்தனர்.