ADDED : அக் 09, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவர் போராட்டம்
ஒத்திவைப்பு
சத்தியமங்கலம், அக். ௯-
மலையாளி இன ஜாதி சான்றிதழ் கேட்டு, கடம்பூர் மலைப்பகுதி குத்தியாலத்துார் ஊராட்சியில் உள்ள, ௨௧ கிராமங்களை சேர்ந்த மக்கள், நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளில் பந்தல் அமைத்து, காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதிலும் பள்ளி மாணவர்கள் இணைந்து கொண்டனர். நேற்று காலை முதல் மாலை வரை நீடித்த போராட்டத்தில், 800க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நேற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

