/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பல வடிவம், வண்ணங்களில் விற்பனைக்கு வந்த பானை
/
பல வடிவம், வண்ணங்களில் விற்பனைக்கு வந்த பானை
ADDED : ஜன 13, 2024 04:12 AM
ஈரோடு: பொங்கல் பண்டிகைக்காக, ஈரோடு மாநகர பகுதிகளில், பல வடிவங்களில் வண்ண வண்ண பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விற்பனையாளர்கள் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்காக, சிறிய அளவிலான வண்ணம் தீட்டப்பட்ட பானை, 200 ரூபாய் முதல், 250 ரூபாய்; ஐந்து படி அரிசி பொங்கும் அளவிலான பானை, 700 ரூபாய் முதல், 900 ரூபாய் வரை உள்ளது.
தற்போது சீசன் என்பதால் பல வகையான வண்ணங்களை பானைகளுக்கு தீட்டி விற்பனை செய்கிறோம். இவை தவிர, மண் உண்டியல், பூந்தொட்டி, மண் அடுப்பு, மண் சட்டி, அகல்விளக்கு என பல்வேறு மண் சார்ந்த பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. இந்த முறை பானை தயாரிப்பதற்கான களிமண் போதிய அளவில் கிடைக்காததால், கடந்த ஆண்டை விட விலை சற்றே கூடியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.