/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10 நாளில் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
/
10 நாளில் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
ADDED : ஜன 26, 2025 04:40 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 10 நாளில் தங்கம் பவுனுக்கு, 1,840 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கடந்த, 15ல் ஒரு கிராம், 7,350 ரூபாய், ஒரு பவுன், 58,800 ரூபா-யாக இருந்தது. கடந்த, 19ல், ஒரு கிராம், 7,390 ரூபாய், 21ல் 7,410 ரூபாய், 22ல் 7,460 ரூபாய், 23ல் 7,480 ரூபாய், 24ல் 7,515 ரூபாய், நேற்று ஒரு கிராம் 7,580 ரூபாய், ஒரு பவுன், 60,640 ரூபாயானது. அதாவது, 10 நாளில் பவுனுக்கு, 1,840 ரூபாய் உயர்ந்துள்ளது. இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பதவியேற்கும் முன்பிருந்து அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைந்தது. இதனால் பல்வேறு பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அப்-பொருட்களின் விலை சரிவதை அறிந்து, தங்கத்தின் மீது முத-லீட்டை திருப்பி உள்ளனர். ரூபாய் மீதான மதிப்பு குறையும்-போது, தங்கத்தின் மீது முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், உலக தங்க சந்தையில் முதலீடு அதிக-ரித்து, தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது. இவ்வாறு கூறினர்.

