ADDED : நவ 24, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், ஈரோடு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், கிளை தலைவர் ஜோதிமணி தலைமையில் போராட்டம் நடத்தினர்.
சுரேஷ்பாபு வரவேற்றார். நிர்வாகிகள் ஸ்ரீதேவி, முருகையா, விஜயராகவன், இளங்கோ உட்பட பலர் பேசினர்.கடந்த மார்ச், 14 ல் முத்தரப்பு ஒப்பந்தப்படி கேங்மேன் பணியாளர்களை, கள உதவியாளராக பதவி மாற்றம் செய்ய வேண்டும். கடந்த நவ., 2ல் மின் துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்று கொண்டபடி கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் கள உதவியாளராக பதவி மாற்றம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
