ADDED : ஜூன் 06, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
அனைத்து
டேரிப் விசைத்தறி கூடங்களுக்கு தற்போது உள்ள, 1,000 யூனிட் இலவச
மின்சாரம், த.வெ.க., தேர்தல் வாக்குறுதிப்படி, 1,500 யூனிட்டாக
உடனடியாக மாற்றி அறிவித்து வழங்க வேண்டும்.
இலவச வேட்டி, சேலைகள் மறுசுழற்சி ஆவதை தடுக்க, கலர் குறி, பார்டர் கலர் போன்றவை ஆண்டு தோறும் மாற்றி வழங்க வேண்டும்.
தமிழகத்தில்,
2.25 கோடி ரேஷன் கார்டு உள்ளதால், அனைவருக்கும் தரமான இலவச வேட்டி,
சேலை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும். குடிசை தொழிலாக செய்து வரும்
விசைத்தறி கூடங்களுக்கு, பழைய சொத்து வரியை நடைமுறைப்படுத்த
வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்டன.
