தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெவ்வேறு இடங்களில் மூன்று பேர் தற்கொலை

வெவ்வேறு இடங்களில் மூன்று பேர் தற்கொலை

வெவ்வேறு இடங்களில் மூன்று பேர் தற்கொலை


ADDED : ஜூன் 06, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில், 3 பேர் இறந்தனர்.

* ஈரோடு மாவட்டம் சின்னிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்த குமாரசாமி மகன் அருண்குமார், 28; கோழிப்பண்ணை தொழிலாளி. இவரின் மனைவி சேலத்தை சேர்ந்த திவ்யா. தம்பதிக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் சேலத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு திவ்யா சென்றுவிட்டார்.

இதனால் சின்னியகவுண்டம்பாளையத்தில் தனியாக வசித்து வந்த அருண்குமார், அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். நேற்று முன்தினம் மது குடித்த நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்தார். வீட்டு உரிமையாளர் பார்த்து, அவரது குமாரசாமிக்கு தகவல் தெரிவித்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அருண்குமாரை அழைத்து சென்றபோது, வரும் வழியில் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஈரோடு பெரியவலசு, பிரசாந்த் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மனைவி வேலுமணி, 58; சுந்தர்ராஜன் ரியல் எஸ்டேட் தொழிலும், வேலுமணி போஸ்ட் ஆபீஸில் ஆர்.டி., ஏஜென்டாகவும் பணி செய்து வந்தனர். நான்கு மாதமாக மன அழுத்தத்தில் இருந்த வேலுமணி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஈரோடு, கருமாண்டிசெல்லிபாளையம், செங்காடு பகுதியை சேர்ந்த ராசன் மகன் சந்தோஷ், 23; இவர், பெருந்துறையில் உள்ள ஆயில் மில்லில் பணி செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், வீட்டில் தெரிவிக்காமல் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். கடந்த, 3 நாட்களாக வெளியூர் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையில், ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே தொடக்கப்பள்ளி அருகே மயங்கிய நிலையில் சந்தோஷ் படுத்திருப்பதாக தகவல் வந்தது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரிக்கு அழைத்து சென்றபோது, அவர் இறந்தது தெரியவந்தது. சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us