/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விசைத்தறியாளர்கள் பொதுக்குழு கூட்டம்
/
விசைத்தறியாளர்கள் பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 22, 2024 01:11 AM
ஈரோடு: தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாநில செயலாளர் வேலுசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
மாநில தலைவர் சுரேஷ், மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், கந்தவேல் பேசினர்.புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அரசும், தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 39 எம்.பி.,க்களும் ஜவுளி துறை மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீடு மறு சீராய்வு மற்றும் விசைத்தறிக்கான தனி ரக ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.தமிழக அரசு இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடைக்கான, 30 சதவீத உற்பத்தி கூலியை, இந்தாண்டு உயர்த்தி வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்கு வரியில்லா ஏற்றுமதியை ஊக்கப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.