/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சேவிங், கட்டிங் செய்யாமல் கவாத்து பயிற்சி:27 பேரை ஓட விட்டு தண்டித்த எஸ்.பி.,

ADDED : அக் 12, 2025 01:56 AM
ஈரோடு;வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆயுதப்படை, சட்டம்-ஒழுங்கு போலீசார் கவாத்து பயிற்சியில் ஈடுபட டி.ஜி.பி., உத்தர விட்டிருந்தார். இரு தினங்களுக்கு முன் இதை மேற்கோள்காட்டி, ஈரோடு எஸ்.பி., சுஜாதா, மாவட்ட போலீசாருக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று, ஈரோடு ஆயுதப்படைக்கு கவாத்து பயிற்சியை பார்வையிட சென்றார். இதில் ஆயுதப்படையை சேர்ந்த, 130 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
துறை சார்பில் வழங்கிய சீருடையை அணியாமலும், சரிவர தலைமுடியை சீரமைக்காமலும், முக சவரம் செய்யாமலும், ஷூவுக்கு சரிவர பாலிஸ் போடாமல் வந்திருந்ததை பார்த்து அதிருப்தி தெரிவித்தார். இந்த வகையில் கண்டறியப்பட்ட, ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு போலீசார், 27 பேரை, ஆயுதப்படை மைதானத்தை சுற்றி வர எஸ்.பி., தண்டனை வழங்கினார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் மோட்டார் வாகன பிரிவில், 2003 முதல் 2018 வரையுள்ள போலீசாரை உடனடியாக பட்டியலிட்டு, போலீஸ் ஸ்டேஷன் பணிக்கு அனுப்பி வைக்கவும், அதிகாரி
களுக்கு உத்தரவிட்டார்.