/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மழை பாதிக்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை; 140 முகாம்களும் தயார் என அமைச்சர் தகவல்

ADDED : அக் 16, 2024 07:07 AM
ஈரோடு: ஈரோட்டில் காந்திஜி சாலை, ஜவான் பில்டிங் பின்புறம் பெரும்பள்ளம் ஓடை பகுதியில் மழை நீர் தடையின்றி செல்லும் வகையில் துார்வாரும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். மழை காலத்தில் இப்பகுதியில் சேகரமாகும் வெள்ளம், பெரும்பள்ளம் ஓடையை ஒட்டிய பகுதி வீடுகளுக்குள் சென்றுவிடாமல் தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள யோசனை தெரிவிக்கப்பட்டது.
பின், குயவன்திட்டு, நாடார்மேடு உட்பட பல்வேறு தாழ்வான பகுதியில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த கால அனுபவங்களை வைத்து, 44 இடங்கள் மழையால் பிரச்னை ஏற்படும் இடம் என கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாநகரில் தாழ்வான பகுதி என, 7 பகுதி கண்டறியப்பட்டுள்ளது. அதிக மழை பெய்து, தண்ணீர் வந்தால் அம்மக்களை தங்க வைக்க முன்னேற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தனித்தனியாக மண்டலம் வாரியாக குழு அமைத்து, பணிகளை கவனிக்க உள்ளனர். மருந்து, மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்ட அளவில், மக்களை தங்க வைக்க, 140 இடங்கள் கண்டறிந்து முகாம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம். இதுவரை தங்க வைக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை. ஒவ்வொரு முகாமுக்கும் அதிகாரிகள் நியமித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.