/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் கார்த்திகை தீப விழா ஏற்பாடுகள் தீவிரம்
/
சென்னிமலையில் கார்த்திகை தீப விழா ஏற்பாடுகள் தீவிரம்
சென்னிமலையில் கார்த்திகை தீப விழா ஏற்பாடுகள் தீவிரம்
சென்னிமலையில் கார்த்திகை தீப விழா ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : டிச 12, 2024 01:34 AM
சென்னிமலை, டிச. 12-
சென்னிமலை, முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருநாளை ஒட்டி, மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதற்காக,
சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள, ஐந்து நிலை ராஜ கோபுரத்தின் முன் மஹாதீபம் ஏற்ற வசதியாக கம்பம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பத்தில் தீபம் ஏற்ற தீபத்திற்கு திரி மற்றும் எண்ணெய் கொண்டு செல்ல ஏணி அமைக்கும் பணி நேற்று காலை நடந்தது. கிரேன் உதவியுடன், கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்ற வசதியாக இரும்பு தடுப்புகளால் ஆன பெரிய இரும்பு ஏணியை, மஹா தீப கம்பத்தில் பொருத்தும் பணிகள் நேற்று நிறைவு பெற்றது. கோவில் பணியாளர்கள், கிரேன் ஆப்ரேட்டர்கள் பணிகளில் ஈடுபட்டனர். மஹா தீப கம்பத்தில் நாளை மாலை தீபம் ஏற்றப்படுகிறது.