ADDED : அக் 24, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:காய்ச்சல்
மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், தடுப்பு
நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது சம்பந்தமாக, தொற்றுநோய்
தடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் அந்தியூரில் நடந்தது.
அந்தியூர் பி.டி.ஓ., மகேஷ் முன்னிலை வகித்தார். அந்தியூர் வட்டார
மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமை வகித்தார். எண்ணமங்கலம்,
சின்னத்தம்பிபாளையம், அத்தாணி, பர்கூர் மற்றும் ஓசூர் ஆரம்ப சுகாதார
நிலைய பகுதிகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மருத்துவ
அலுவலர், நடமாடும் மருத்துவக்குழு மருத்துவ அலுவலர், பேரூராட்சி
செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், சுகாதார
ஆய்வாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து
கொண்டனர்.
