sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எலுமிச்சம் பழம் விலை 'கிடுகிடு' கிலோ ரூ.௨௨௦; 1 பழம் ௧௦ ரூபாய்

/

எலுமிச்சம் பழம் விலை 'கிடுகிடு' கிலோ ரூ.௨௨௦; 1 பழம் ௧௦ ரூபாய்

எலுமிச்சம் பழம் விலை 'கிடுகிடு' கிலோ ரூ.௨௨௦; 1 பழம் ௧௦ ரூபாய்

எலுமிச்சம் பழம் விலை 'கிடுகிடு' கிலோ ரூ.௨௨௦; 1 பழம் ௧௦ ரூபாய்


ADDED : செப் 21, 2024 07:23 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் கடந்த சில நாட்களாக, 100 டிகிரிக்குமேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயிலில் தாக்-கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள, ஜூஸ் வகைகளை மக்கள் அதிகம் நாட தொடங்கியுள்ளனர். அதிகமாக லெமன் ஜூஸ் குடிப்பதால், எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்துள்ளது.

அதேசமயம் சீசன் இல்லாததால், வரத்து குறைந்துள்ளது. வழக்-கமாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும், 5 டன் முதல், 6 டன் எலுமிச்சம் பழம் விற்பனைக்கு வரும். தற்போது, 2 டன் மட்டுமே வரத்தாகிறது. இதனால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதுகுறித்து மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது: கடந்த வாரம் ஒரு கிலோ எலுமிச்சம் பழம், 150 முதல் 170 ரூபாய் வரை

விற்பனையானது. தற்போது, 200 ரூபாய் முதல், 220 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு பழம், 7 ரூபாய் முதல்

10 ரூபாய் வரை விற்பனையாகிறது.தென்காசி மாவட்டம் புளியங்குடி, திருச்சி மற்றும் பெங்களூரு பகுதியில் இருந்து ஈரோடு மார்க்கெட்டுக்கு எலுமிச்சம்பழம் வரு-கிறது.

அப்பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வரத்து குறைந்துள்ளது. ஆயுதபூஜை நெருங்கும் நிலையில், விலை மேலும் உயர

வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us