/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கர்நாடகாவில் முதற்கட்ட தேர்தல் நிறைவு; அந்தியூர், பவானிசாகரில் குழு கலைப்பு

ADDED : ஏப் 27, 2024 07:04 AM
ஈரோடு : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடந்தபோது, தேர்தல் விதிமீறல், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குதல், சோதனைகளை நடத்த பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தி கண்காணித்தனர். கடந்த, 19ல் தேர்தல் முடிந்ததால் அனைத்து குழுக்களும் கலைக்கப்பட்டன. ஆனால், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் தேர்தல் நடப்பதால், தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் உள்ள அந்தியூர் மற்றும் பவானிசாகர் சட்டசபை தொகுதியில் மட்டும் தலா, 5 நிலை கண்காணிப்பு குழுவை மட்டும் நியமித்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் முதற்கட்ட தேர்தலில், ஈரோடு மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதனால் அந்தியூர், பவானிசாகர் தொகுதியில் செயல்பட்ட கண்காணிப்பு குழுவை தேர்தல் ஆணை விதிகளின்படி கலைக்கப்படவுள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.