/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைதிகள் தப்பிய விவகாரம்: 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
/
கைதிகள் தப்பிய விவகாரம்: 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
கைதிகள் தப்பிய விவகாரம்: 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
கைதிகள் தப்பிய விவகாரம்: 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : ஜன 08, 2024 12:29 PM
ஈரோடு: கோபியில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து, கைதிகள் தப்பிய விவகாரத்தில், எஸ்.ஐ., உட்பட நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூரை சேர்ந்த அய்யப்பன், 24, சேது, 25 மற்றும் பரணி, 19 ஆகியோர், ஈரோடு மாவட்டம் சிங்கிரிபாளையம், கரிய காளியம்மன் கோவில் உண்டியல் உடைத்து, 9,388 ரூபாய் திருடிய வழக்கில், கடத்துார் போலீசார் கடந்த 30ல் கைது செய்தனர். கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். சிறுவலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில் நடந்த, ஒரு திருட்டு வழக்கில் மூவருக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதற்காக சிறுவலுார் போலீசார் கோபி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மூவரையும் நேற்று முன் தினம் ஆஜர்படுத்தினர். பணி முடிந்த பின் மதியம் நீதிமன்ற வளாகத்தில் மூவரையும் சாப்பிட அனுமதித்தனர். உணவு சாப்பிட்ட பின் கை கழுவ சென்ற
அய்யப்பன், சேது வெவ்வேறு திசையில் புகுந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கைதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிறுவலுார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஜான் கென்னடி, 50. ஏட்டு கீதா மணி, கிரேடு-1 போலீசார் பழனிச்சாமி, அருண் ராஜ் என நான்கு பேரை, ஈரோடு எஸ்.பி., ஜவகர், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டார்.