/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரம்மி விளையாட்டால் தனியார் ஊழியர் தற்கொலை
/
ரம்மி விளையாட்டால் தனியார் ஊழியர் தற்கொலை
ADDED : அக் 21, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூளை, பூசாரி தோட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 42; ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஏஜென்ட். இவரின் மனைவி சுதா, 40; தம்பதியருக்கு மகன் உள்ளார். ஆறுமுகத்துக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது.
ஆறு மாதங்களாக ரம்மி விளையாடி பணம் தோற்றதால், சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்தவர் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.