நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனியார் அதிகாரி பலி
பவானி, நவ. 24-
நாமக்கல் மாவட்டம் சமயசங்கிலி, கன்னிமார்காட்டை சேர்ந்தவர் யுவராஜா, 34; ஈரோட்டில் ஒரு தனியார் பைனான்ஸ் கம்பெனியில் மேலாளராக இருந்தார். வசூல் தொடர்பாக அவிநாசி சென்று விட்டு, யமாஹா எப்இசட் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊருக்கு திரும்பினார்.
பவானியை அடுத்த கோணவாய்க்கால் எதிரில் வந்தபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஆம்னி பஸ் பின்புறத்தில் பைக் மோதியது. ஹெல்மெட் அணிந்திருந்தும் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜா சம்பவ இடத்தில் பலியானார். சித்தோடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது
குறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

