/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனியார் பள்ளி மூடல் விவகாரம் வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
/
தனியார் பள்ளி மூடல் விவகாரம் வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
தனியார் பள்ளி மூடல் விவகாரம் வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
தனியார் பள்ளி மூடல் விவகாரம் வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
ADDED : டிச 02, 2025 02:51 AM
திருப்பூர், தாராபுரத்தில் உள்ள தேன்மலர் மெட்ரிக் பள்ளியில் விதிமீறலில் கட்டடங்கள் கட்டப்பட்டது தொடர்பான வழக்கில், ஐகோர்ட் உத்தரவுபடி கட்டடத்தை இடித்து, பள்ளிக்கு 'சீல்' வைக்க தாராபுரம் நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களின் பெற்றோர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்பள்ளியில் படித்து வரும், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியரை அருகே உள்ள, மூன்று தனியார் பள்ளியில் சேர்த்து கொள்ள கல்விதுறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
பொதுத்தேர்வை சந்திக்க உள்ள பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்தவர்களுக்கான நடவடிக்கை, கோர்ட் உத்தரவை பொறுத்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
போலீசார் கூறுகையில், ''பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோரை தவிர, மற்ற வகுப்பை சேர்ந்தவர்கள் அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெற்றோர், மூன்று மாதம், பள்ளி மீதான நடவடிக்கையை தள்ளி வைக்க அனுமதி அளிக்க கேட்டுள்ளனர். அனுமதி கிடைத்தால், அந்த பள்ளியில் தொடர்வர். இல்லையென்றால், வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி கொடுக்கப்படும் என்று பெற்றோரிடம் கல்விதுறையினர் தெரிவித்துள்ளனர்'' என்றனர்.

